கண்ணில் ஏற்படும் நோய்களை குணப்படுத்துவதற்கு நேரடியாகவே கண்ணினுள் திரவ மருந்தினை செலுத்தக்கூடிய வகையில் பச் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
Spiky Eye Patch எனப்படும் இது நெகிழும் தன்மையை கொண்டுள்ளது.
அத்துடன் பல ஊசி போன்ற மெல்லிய அமைப்பு காணப்படுவதனால் கண்ணில் பரந்த இடத்திற்கு ஒரே நேரத்தில் மருந்தினை செலுத்தக்கூடியதாகவும் இருக்கின்றது.
இந்த பச்சின் ஊடாக சிகிச்சை அளிப்பது இலகுவாக இருப்பதுடன், நோயாளிக்கு அதிக நோவினையும் ஏற்படுத்தாது என மருத்துவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
எவ்வாறெனினும் இப் பச்கள் பாவனைக்கு வருவதற்கு சில காலம் எடுக்கும் என தெரிகிறது.