பல்லிகள் தொடர்பில் ஆச்சரிய தகவலை வெளியிட்ட விஞ்ஞானிகள்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

2018 ஆம் ஆண்டு நிறைவடையும் நேரம் வந்துவிட்டது. எனினும் விஞ்ஞானிகளின் தேடல்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

இவ்வருடம் நிறைவடையும் நிலையில் பல்லிகள் தொடர்பிலான புதிய தகவல் ஒன்றினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அதாவது பல்லிகள் நீரின் கீழும் சுவாசிக்கக்கூடியவை என்பதை முதன் முறையாக கண்டுபிடித்துள்ளனர்.

அத்துடன் இதற்கான ஆதாரத்தினையும் வெளியிட்டுள்ளனர்.

கோஸ்டாரிக்கா கடற் பகுதியில் Neil Losin மற்றும் Nate Dappen எனும் இரு ஒளிப்பதிவாளர்களால் இந்த ஆச்சரியமூட்டும் சம்பவம் பதிவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் ஆராய்வதற்காக விஞ்ஞானிகள் முயற்சி செய்யும் தருணத்தில் ஆராய்ச்சியாளர்கள் கருத்து ஒன்றினை முன்வைத்துள்ளனர்.

அதாவது மனிதர்கள் நீரின் கீழாக சுழியோடுவதற்கு சிலிண்டரில் ஒட்சிசனை சேகரித்து பயன்படுத்துவது போன்ற அமைப்பு பல்லிகளிலும் காணப்படலாம் என தெரிவித்துள்ளனர்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers