நினைத்ததை விடவும் விரைவாக மாசடையும் வளிமண்டலம்: ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

பூமியில் வளி மண்டலத்தில் காபனீரொட்சைட் வாயுவின் செறிவு மிகவும் விரைவாக அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த வருடம் காணப்பட்ட காபனீரெட்சைட் செறிவினைக் காட்டிலும் 2019 ஆம் ஆண்டில் இந்த அதிகரிப்பு பல மடங்காக இருக்கும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

1958 ஆம் ஆண்டிலிருந்து வளிமண்டலத்தில் காபனீரொட்சைட்டின் பரவுகை தொடர்பில் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றது.

இதன்படி தற்போதுவரையில் 30 சதவீதம் வரை காபனீரொட்சைட் அதிகரிப்பு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான அதிகரிப்பிற்கு மனித நடவடிக்கைகளே முற்றுமுழுதான காரணம் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers