ஆராய்ச்சியாளரின் சொர்க்கம்... ஆனால் கொத்துக் கொத்தாக சடலங்கள்: வெளியான அதிர்ச்சி தகவல்

Report Print Arbin Arbin in விஞ்ஞானம்

பெயரைப் போன்றே பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் பகுதி கிரேட் ப்ளூ ஹோல். கரீபியன் கடலில் அமைந்துள்ள இப்பகுதியானது ஆராய்ச்சியாளர்களுக்கும் ஸ்கூபா டைவர்களுக்கும் மிகவும் பிடித்தமான இடமாகும்.

ஆனால் இப்பகுதி தொடர்பில் தற்போது உறையவைக்கும் பல தகவல்கள் வெளிவந்துள்ளது.

125 அடி ஆழம் கொண்ட இந்த நீல வண்ண பள்ளத்தில் பார்வையாளர்களை சுண்டியிழுக்கும் பவழத் தீவும் தெள்ளத் தெளிவான கடற்பகுதியும் அமைந்துள்ளது.

ஆனால் குறித்த பகுதியால் ஈர்கப்பட்டு சென்றவர்கள் பெரும்பாலானவர்கள் இதுவரை திரும்பியது இல்லை என்பதால் இப்பகுதியை பீதி நிறைந்த இடமாகவே பார்க்கப்படுகிறது.

கிரேட் ப்ளூ ஹோல் பகுதி பயணத்தினிடையே மரணமடைந்தவர்களின் சடலங்களை தற்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

தற்போது தொழில்நுட்ப உதவியுடன் கிரேட் ப்ளூ ஹோல் பகுதியின் ஆழங்களில் சென்ற ஆராய்ச்சியாளர்களே, முன்னர் ஆய்வுக்காக சென்ற ஆய்வாளர்களின் சடலங்களை கண்டுபிடித்துள்ளனர்.

இதுவரை மூவர் மட்டுமே கிரேட் ப்ளூ ஹோல் பகுதியில் மாயமானதாக உத்தியோகப்பூர்வ தகவல். ஆனால் பத்துக்கும் மேற்பட்டவர்கள் இதுவரை மாயமாகியிருக்கலாம் என ஆய்வாளர்கள் தரப்பு தெரிவிக்கின்றன.

கடலின் ஆழங்களில் அமைந்துள்ள பள்ளங்களில் பொதுவாக உயிரினங்களோ செடி கொடிகளோ வாழத்தகுந்தவை அல்ல.

300 மீற்றர் பரப்பளவும் 125 மீற்றர் ஆழமும் கொண்ட கிரேட் ப்ளூ ஹோல் பகுதியில் 90 மீற்றர் வரை மட்டுமே உயிரினங்களை ஆய்வாளர்கள் இதுவரை கண்டறிந்துள்ளனர்.

அதற்கு கீழே ஆக்ஸிஜன் இல்லை என்பது மட்டுமல்ல, ஹைட்ரஜன் சல்பைட் நிரம்பியுள்ளது எனவும் கூறப்படுகிறது.

அதனாலையே கிரேட் ப்ளூ ஹோல் பகுதியானது கடலின் இடுகாடு என ஆய்வாளர்களால் அழைக்கப்படுகிறது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்