ஷும் செய்யக்கூடிய கன்டாக்ட் லென்ஸினை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

பார்வைக் குறைபாட்டினை நிவர்த்தி செய்வதற்காகவும், அழகிற்காகவும் கன்டாக்ட் லென்ஸ்கள் உருவாக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் குறித்த கன்டாக்ட் லென்ஸ்களில் புதிய தொழில்நுட்பம் ஒன்றினை தற்போது விஞ்ஞானிகள் புகுத்தியுள்ளனர்.

இதன்படி இவற்றினை அணிந்து காட்சிகளை உருப்பெருப்பித்து அவதானிக்க முடியும்.

இதற்காக கண்ணை இருமுறை மூடித்திறந்தால் போதும் தானாகவே காட்சிகள் உருப்பெருப்பிக்கப்படும்.

மீண்டும் இருமுறை மூடித் திறக்கும்போது காட்சிகள் சாதாரண தோற்றத்திற்கு மாறிவிடும்.

இக் கன்டாக்ட் லென்ஸினை கலிபோர்னியா சான் டிக்கோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்