பல கோடிக்கணக்கான பறவைகள் அழிவு: ஆய்வுகளில் வெளியான அதிர்ச்சி தகவல்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

ஆசியா மற்றும் அமெரிக்கா கண்டங்களில் உள்ள பறவைகள் ஆபத்தை எதிர்நோக்கியிருப்பதாக இரு வேறு ஆய்வுகள் எச்சரிக்கை செய்துள்ளன.

இதில் ஒரு ஆய்வில் அமெரிக்க கண்டத்திலுள்ள பறவைகளைப் பற்றியும் மற்றொன்று ஆசிய கண்டத்திலுள்ள பறவைகளைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளன.

அமெரிக்கா மற்றும் கனடாவில் 1970 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது தற்போது 29 சதவீதமான பறவைகள் அழிவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கையானது ஏறத்தாழ 3 பில்லியன்கள் ஆகும்.

அதேபோன்று ஆசிய கண்டத்திலுள்ள ஜாவா தீவு, இந்தோனேசியா போன்ற நாடுகளில் காடுகளில் உள்ள பறவைகளை விடவும் வீடுகளில் உள்ள கூடுகளில் அதிக பறவைகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இவ்வாறான தேடல்கள் எஞ்சியுள்ள பறவைகளை காப்பாற்ற உதவியாக இருக்கும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்