பல வருடங்கள் பழைமைவாய்ந்த நீர்க் கீழ் மர்மக் கோட்டை கண்டுபிடிப்பு

Report Print Givitharan Givitharan in சிறப்பு

துருக்கி நாட்டிலுள்ள வான் வாவியானது மிகவும் பெரியதாகும்.

இவ் வாவியில் சுமார் 3,000 வருடங்கள் பழைமைவாய்ந்த கோட்டை ஒன்று மூழ்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Van Yüzüncü Yıl பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளர்களே இதனைக் கண்டுபிடித்துள்ளனர்.

அண்மைக் காலமாக நீரிழ் அமிழ்ந்துள்ள பழங்கால நகரங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டு வந்துள்ளன.

இதன் தொடர்ச்சியாகவே இக் கோட்டையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இக் கோட்டையின் தூண்கள் சுமார் ஒரு கிலோ மீற்றர்கள் அளவிற்கு பரந்து காணப்படுவதாகவும் அவற்றின் உயரம் 3 தொடக்கம் 4 மீற்றர்கள் உயரமுடையதாகவும் காணப்படுகின்றது.

மேலும் இக் கோட்டையானது கி.மு 9ம் நூற்றாண்டிற்கும் 6ம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers