தூங்கும்போது கடவுள் கனவில் வந்தால் என்ன பலன் கிடைக்கும்?

Report Print Gokulan Gokulan in ஆன்மீகம்

கனவு என்பது மனிதனுக்கு இரவில் இன்னொரு உலகம். அந்த உலகத்தில் அவர் இருப்பது 8 மணியோ, 6 மணியோ அது அவன் தூங்குவதை பொறுத்தது.

வித்தியாச வித்தியாசமான கனவு. காதல் கனவு, திருமண கனவு இப்படி பல கனவுகள் நாம் தூங்கும் போது காண்கிறோம். இது கனவு இல்லை. மனிதனுக்கு மறு உலகம் என்றும் கூட சொல்லலாம்.

அப்படி இரவில் கனவு உலகத்தில் போகும் போது கோவில் பற்றின கனவு வந்தால் என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்

கோவில் பற்றின கனவு வந்தால் என்னென்ன பலன் கிடைக்கும்
  • கனவில் கோவிலை காண்கிறீர்கள். அப்படி நீங்கள் கோவிலை காணும்பொழுது நீங்கள் நினைத்த காரியம் நடக்கும்.
  • கோவிலுக்கு செல்கிறீர்கள் ஆனால் நீங்கள் கோவிலுக்குள் செல்ல முடியவில்லை என்றால் நீங்கள் எதிர்பாராத சில சிக்கல்களில் மாட்டிக்கொள்வீர்கள் என்று அர்த்தம்.
  • கோவிலில் நீங்கள் மட்டும் தனியாக இருக்கிறீர்கள். திடீரென கோவில் கதவுகள் சாத்தப்படுகிறது என்றால் உங்களுக்கு பணம் வரும் வழிகள் திடீரென அடைபடுவதாக அர்த்தம்.
  • கோவிலுக்கு செல்கிறீர்கள் கோவில் நடை சாத்தப்பட்டிருக்கிறது. நீங்கள் வாசலை திறந்து உள்ளே செல்கிறீர்கள் மிகப்பெரிய வெற்றிகளை அடைய போகிறீர்கள் என்று அர்த்தம்.
  • கனவில் கடவுளுக்கு மாலை அணிவிப்பது போல கனவு கண்டால் நீங்கள் உங்களுடைய முயற்சியில் வெற்றியடைய போகிறீர்கள் என்று அர்த்தம்.
  • கடவுளை நீங்கள் உங்களுடைய கனவில் கண்டால் உங்களுடைய எல்லா பிரச்சனைகளையும் கடந்து நீங்கள் வெற்றிபெறுவீர்கள் என்று அர்த்தம்.
  • கோவில் கோபுரத்தை நீங்கள் உங்கள் கனவில் கண்டால் மிகப்பெரிய வளர்ச்சியை அடையப்போகிறீர்கள் என அர்த்தம்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...