இலங்கை கடற்படை கப்பல் மோதி இறந்த தமிழக மீனவர்! கண்ணீரில் குடும்பத்தினர்

Report Print Fathima Fathima in இலங்கை

இலங்கை கடற்படை கப்பல் மோதி கடலில் விழுந்து இறந்த மீனவரின் உடல் தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்டது.

ராமநாதபுரத்தின் தேவிபட்டினம் அருகே இலந்தைகூட்டத்தை சேர்ந்தவர் முனியசாமி (வயது 68).

கடந்த 12ம் திகதி நான்கு பேருடன் விசைப்படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றார், அப்போது கச்சத்தீவு பகுதிக்கு அருகே சென்ற போது, ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை எச்சரித்தனர்.

அத்துடன் கப்பலால் படகுகளை மோதியதுடன் விலை உயர்ந்த மீன்களை பிடித்து சென்றனர், இதில் படகில் இருந்த நால்வரும் கடலில் விழுந்தனர்.

மூவரை மீட்ட இலங்கை கடற்படையினரால் முனியசாமியை மட்டும் மீட்க முடியவில்லை, மற்ற மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

முனியசாமி பற்றி தகவல் ஏதும் தெரியாததால் அவர்களது குடும்பத்தினர் கண்டுபிடித்து தரும்படி அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் கடற்கரையில் ஒதுங்கிய முனியசாமியின் உடலை மீட்ட இலங்கை அரசு பிரேத பரிசோதனை செய்ததுடன் தமிழக அரசுக்கு தகவல் கொடுத்தனர்.

இதனை தொடர்ந்து இலங்கையில் இருந்து மீனவர் முனியசாமியின் உடல் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் நேற்று காலை திருச்சி கொண்டு வரப்பட்டது.

விமான நிலையத்தில் அவரது உடலுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார், பின்னர் மீனவரின் உடல் சொந்த ஊருக்கு ஆம்புலன்ஸ் வேனில் கொண்டு செல்லப்பட்டது, அங்கு அவருக்கு குடும்பத்தினர் கண்ணீருடன் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers