கோத்தபாய ஆட்சியில் இந்தியாவுக்கு உள்ள ஐயப்பாடு! அதனால் எடுத்த முக்கிய முடிவு

Report Print Raju Raju in இலங்கை

இலங்கை ஜனாதிபதி தேர்தல் குறித்து இந்தியாவும், சீனாவும் உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரியவந்துள்ளது.

இந்தியாவை பொறுத்த வரையில் அந்நாட்டின் தேசிய பாதுகாப்பை மையப்படுத்திய நகர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இலங்கை விடயங்களை கையாள்வதுடன் சீனாவை பொறுத்தவரையில் தனது புதிய பட்டுப்பாதை திட்டத்தை மையப்படுத்திய நகர்வுகளுக்கு முன்னுரிமையளித்தே செயற்படுகின்றன.

எனவே தான் இலங்கையின் அரசியல் முன்னேற்றங்கள் குறித்து இந்தியா மற்றும் சீனா உன்னிப்பாக அவதாவனித்து வருகின்றன.

ஆனால் எந்தவொரு சீன இராணுவ வளங்களையும், பிராந்தியத்திற்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்களையும் இலங்கை அனுமதிக்க கூடாது என்பதுடன் இந்திய மூலோபாய நலன்களை கொழும்பு பாதுகாக்க வேண்டும் என்ற விடயத்தில் டெல்லி எப்போதும் விட்டுக்கொடுத்ததில்லை.

மஹிந்த ராஜபக்ச தனது ஆட்சிக்காலத்தில் சீன நீர்மூழ்கிக் கப்பல்களை கொழும்பில் தரித்து நிற்க அனுமதித்தார்.

இதனால் இந்தியா கோபம் கொண்டதால் இரு தரப்பு உறவிலும் விரிசல் நிலை ஏற்பட்டது. இந்த நிலை மீண்டும் வந்து விட கூடாது என்பதில் இந்தியா மிகவும் அவதானத்துடன் உள்ளது. ஏனெனில் சீனாவின் அரசியல் மாணவனாகவே கோத்தபாய ராஜபக்ச காணுகின்றார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் அடிப்படை அரசியல் சார்ந்த விடயங்களை சீனாவிலேயே கற்றுக்கொண்டார்.

எனவே மீண்டும் ஒருமுறை கோத்தாபய ராஜபக்ச ஆட்சியில் சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் மேலோங்கி விடுமோ என்ற ஐயப்பாடு இந்தியாவிற்கு எப்போதும் இருந்ததுண்டு. மறுபுறம் அவ்வாறானதொரு நிலைமை மீண்டும் ஏற்படாதிருக்கவும் இந்தியா கரிசனையுடனேயே உள்ளது.

எனவே தான் இது தொடர்பான முக்கிய முடிவாக இலங்கையின் நலன்களில் இந்தியா முன்பை விட தற்போது உணர்ந்து செயற்படுகின்றது. அதிகாரத்திற்கு வரும் எந்தவொரு அரசாங்கத்துடனும் இணைந்து செயல்படவும் இங்கிடம்பெறக் கூடிய எந்தவொரு புதிய மாற்றமும், பிராந்தியத்தில் இந்தியாவின் நலன்களைப் பாதுகாப்பதாக இருக்க வேண்டும் என்பதில் இந்தியா முழுமையான புரிதலுடன் செயற்படுகின்றது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்