இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வாக்களிப்பது எப்போது?

Report Print Fathima Fathima in இலங்கை
25Shares

நாளை நடைபெறவிருக்கும் இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் 8.000க்கும் அதிகமான சுகாதார அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இலங்கையில் நாளை நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது, இதில் மொத்தம் 225 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

ஒரு கோடியே 60 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாக்களிக்க இருக்கிறார்கள். பாதுகாப்பு பணியில் 69 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிசார், சிறப்பு பொலிஸ் படை, புலானாய்வுத்துறையினர் ஈடுபட இருக்கிறார்கள்.

மேலும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளனர்.

காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குபதிவு மாலை 5 மணிவரை நடைபெறுகிறது, தங்களை தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் மாலை 4 மணிக்கு மேல் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்களிக்க வரும் மக்கள் கைகளை சுத்தம் செய்ய பின்னர், மாஸ்க் அணிந்து கொண்டு சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்