சுவிஸில் புதிய 20 பிராங்க் நோட்டு வெளியிடு

Report Print Basu in சுவிற்சர்லாந்து

சுவிஸில் புதிய நோட்டுகள் வெளியிடும் வரிசையில் தேசிய வங்கி புதிய 20 பிராங்க் நோட்டை அறிமுகம் செய்துள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 20 பிராங்க் நோட்டு மே 17ம் திகதி முதல் புழக்கத்திற்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் புதிய 50 பிராங்க் நோட்டு வெளியிடப்பட்டது நினைவுக் கூரதக்கது.

வெளியிடப்படும் புதிய நோட்டுகள் ஒவ்வொன்றிலும் சுவிஸின் பண்புகளை சித்தரிக்கும் படங்கள் இடம்பெற்றுள்ளது.

புதிய சிவப்பு நிற 20 பிராங்க் நோட்டின் படைப்பாற்றல் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது ஒளி மூலம் குறிப்பிடப்படுகிறது. கை, பூமி மற்றும் பட்டாம்பூச்சிகள் ஆகியவை முக்கிய குறிப்புகள் என சுவிஸ் தேசிய வங்கி தெரிவித்துள்ளது.

புதிய நோட்டு சிறியதாகவும், கையாள எளிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 18ம் திகதி புதிய 10 பிராங்க நோட்டு புழக்கத்திற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் வரிசையில் 200, 1000 மற்றும் 100 பிராங்க் நோட்டுகள் 2019ம் ஆண்டு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments