சுற்றுலா சென்ற சுவிஸ் தம்பதி படுகொலை: பொலிஸ் அதிர்ச்சி தகவல்

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
921Shares
921Shares
ibctamil.com

சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த தம்பதி இருவர் சுற்றுலா சென்றபோது படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த 70 வயதான Borner Paul மற்றும் Marriane Hornel என்ற தம்பதி ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவிற்கு கடந்த சனிக்கிழமை சுற்றுலா சென்றுள்ளனர்.

கென்யாவின் இரண்டாவது பெரிய நகரமான Mombasa-வில் உள்ள Nyali ஹொட்டலில் இருவரும் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், நேற்று காலை நேரத்தில் Kiembeni பகுதியில் உள்ள சாலை ஒன்றில் இரண்டு சடலங்களை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

பொலிசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட இருவரும் சுற்றுலா வந்த சுவிஸ் தம்பதி எனக் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுக் குறித்து பொலிசார் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘தம்பதி தங்கியிருந்த வீட்டில் அவர்களை கவனித்துக்கொள்ளவும் பாதுகாக்கவும் இரண்டு பேர் நியமிக்கப்பட்டனர்.

ஆனால், இந்த இரண்டு பேரும் தற்போது தலைமறைவாகியுள்ளனர், கென்யா நாட்டிற்கு வந்தபோது தம்பதியிடம் அதிகம் பணம் இருந்துள்ளது.

இந்த பணம் தற்போது காணாமல் போயுள்ளதால் தலைமறைவாகியுள்ள இருவரிடம் அந்த பணம் இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே, இது ஒரு திட்டமிடப்பட்ட படுகொலை எனவும், குற்றவாளிகள் எங்கு சென்றாலும் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துவோம்’ என பொலிசார் உறுதிப்பட தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்