உலகின் நம்பர் 1 இடத்தை பிடிக்க சுவிஸ்க்கு வாய்ப்பு: எதில் தெரியுமா?

Report Print Raju Raju in சுவிற்சர்லாந்து
288Shares
288Shares
lankasrimarket.com

உலகின் உயரமான கட்டிடங்களில் ஒன்றான Swissmill Tower-ல் Inner-City Climbing Wall அமைக்கப்பட்டால் உலகின் உயரமான உள்சுவர் கொண்ட கட்டிடம் என்ற பெருமை கிடைக்கப்பெறும்.

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் அமைந்துள்ள Swissmill Tower கட்டிடம் தான் அந்நகரத்தின் இரண்டாவது பெரிய கட்டிடமாகும்.

அதில் அமைந்திருக்கும் silo என்ற தானிய உயர்த்தி தான் உலகிலேயே உயரமான உயர்த்தியாகும்.

குறித்த கட்டிடம் 118 மீட்டர் (387 அடி) உயரம் கொண்டதாகும். கட்டிடத்தின் Inner-City Climbing Wall அமைக்கப்பட்டால் அது உலகிலேயே நகர் பகுதியில் அமைக்கப்பட்ட உயரமான உள்சுவர் என்ற பெருமையை பெறும்.

இதை அமைக்க 10,000 francs வரை செலவாகலாம் என தெரிகிறது. அந்நாட்டின் தனியார் கட்டிடக்கலை நிறுவனம் இதுகுறித்து Swissmill Tower உரிமையாளர்களுடன் விரைவில் பேசவுள்ளது.

இதுபோன்ற உள்சுவர் ஆஸ்திரியாவின் வியான்னா நகரிலும், அமெரிக்காவின் ரினோ நகரிலும் அமைந்திருக்கும் கட்டிடத்தில் ஏற்கனவே கட்டப்பட்டுள்ளதாக கட்டிடக்கலை நிறுவனம் சார்பில் ஒருவர் கூறியுள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்