சட்டவிரோத செயலை செய்த சுவிஸ் பொறியாளர் வெளிநாட்டில் கைது

Report Print Raju Raju in சுவிற்சர்லாந்து
198Shares
198Shares
lankasrimarket.com

டிரோன் எனப்படும் சிறிய வகை கண்காணிப்பு வானூர்த்தியை சட்டவிரோதமாக தயாரித்து விற்பனை செய்ததாக சுவிஸ் பொறியாளர் ரோமில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்த செய்தியை இத்தாலியின் செய்தி நிறுவனமான AdnKronos நேற்று வெளியிட்டுள்ளது.

அதன்படி, சில மத்திய கிழக்கு நாடுகளின் ஆயுதப் படைகளுக்கு சட்டவிரோதமாக டிரோன்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்த டிரோன்கள் மூலம் உலகளாவிய செயற்கைக்கோள் அமைப்புகளை வழிநடத்தவும், கண்டறியவும் கண்காணிக்கவும் முடியும்.

டிரோன்களை சட்டவிரோதமாக தயாரித்து விற்றதாக சுவிஸ் பொறியாளர் ஒருவரும், இத்தாலிய தொழிலதிபர் ஒருவரும் ரோம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது சம்மந்தமாக மேலும் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை.

டிரோன்கள் ஸ்பெயினுக்கு முதலில் ஏற்றுமதி செய்யப்பட்டு பின்னர் மத்திய கிழக்கு நாடுகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

கைதான இருவரும் டிரோன்களுக்காக €3.5 மில்லியன் யூரோக்கள் அளவு ஒப்பந்தம் செய்துள்ளதும் விசாரணையில் வெளிவந்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்