கோழி இறைச்சி விரும்பி உண்ணுபவரா? ஆபத்து காத்திருக்கிறது: எச்சரிக்கும் நிபுணர்கள்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் புழக்கத்தில் உள்ள கோழி இறைச்சியில் ஆண்டிபயாடிக் எதிர்ப்பு ESBL கிருமிகளின் தாக்கம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் பெரும்பாலான மக்கள் அதிகமாக எடுத்துக் கொள்ளும் நான்கில் மூன்று சிக்கன் உணவுகளில் ஆண்டிபயாடிக் எதிர்ப்பு ESBL கிருமிகளின் தாக்கம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த கிருமிகளின் தாக்கமானது உடலளவில் ஆபத்தை உருவாக்கும் நிலைக்கு தள்ளப்படலாம் எனவும், இதற்கான சிகிச்சை மிகவும் சிக்கலானது எனவும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

மட்டுமின்றி மிகவும் சாதாரண நோய்த்தொற்று கூட மரணத்தில் கொண்டு விடலாம் எனவும் எச்சரிக்கின்றனர்.

ESBL கிருமிகளானது சமீப காலமாக கோழி இறைச்சிகளில் சர்வ சாதாரணமாக காணப்படுகிறது எனவும், இது இறைச்சி உணவுகளை உரிய முறையில் சமைக்காததாலே மனிதர்களுக்கு பரவுவதாக தெரியவந்துள்ளது.

சர்வதேச நாடுகளில் பரவும் இந்த நோயானது தற்போது சுவிட்சர்லாந்தில் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதை தடுக்கும் சட்டங்கள் எதுவும் தற்போதைய சூழலில் உருவாக்கப்படவில்லை எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

கோழி இறைச்சி உணவுகளை மிதமாக எடுத்துக் கொள்வதும், இறைச்சியை உரியமுறையில் சமைப்பதுமே ESBL கிருமிகளின் தாக்கத்தில் இருந்து காத்துக் கொள்ள ஒரே வழி எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் கோழி இறைச்சியை கையால் தொட நேர்ந்தால், சுத்தமாக கழுவிய பின்னரே பழ வகைகளிலோ அல்லது இனிப்பு வகைகளிலோ கை வைய்யுங்கள் எனவும் எச்சரிக்கின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...