சுவிஸின் ஆல்ப்ஸ் மலையில் முதியவரின் சடலம் கண்டுபிடிப்பு

Report Print Kabilan in சுவிற்சர்லாந்து
47Shares
47Shares
ibctamil.com

சுவிட்சர்லாந்தின் சில்வெட்டா ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் 68 வயது மலையேற்று வீரர் ஒருவரின் சடலத்தை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை ஆஸ்திரியா-கிழக்கு சுவிட்சர்லாந்து எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சில்வெட்டா ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் இருந்து 68 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த முதியவர் மலையேற்று வீரராக இருக்கலாம் என்றும், அவரது உடலில் ஏற்பட்டிருக்கும் காயங்களை பார்க்கும் போது மலையேறுகையில் அவர் தவறி விழுந்திருக்கலாம் என்றும் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும், அவர் ஏற முயன்ற மலையானது சுமார் 2,600 மீற்றர்கள் உயரமுடையது ஆகும். அதன் அருகில் ஃபுர்கா பாஸ் சாலை எனும் உயரமான மற்றும் மிகவும் ஆபத்தான இடம் உள்ளது. எனவே, குறித்த நபர் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே, கடந்த 2017 ஆண்டு இந்த பகுதியில் மலையேற்று வீரர்கள் சிலர் காணாமல் போனதும், அவர்களில் சில மீட்கப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்