சுவிஸ் நாட்டில் குடியிருந்தால் நீண்ட ஆயுளுடன் வாழலாம்: ஆய்வில் வெளியான தகவல்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்றால் ஐரோப்பிய நாடுகளில் சுவிஸ் அல்லது ஸ்பெயின் நாட்டில் குடியிருக்க வேண்டும் என புதிய ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில் சுவிட்சர்லாந்து மக்களின் சராசரி ஆயுட்காலம் 83.7 எனவும், இதுவே ஐரோப்பிய நாடுகளை பொறுத்தமட்டில் உச்சம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் பிராந்தியங்கள் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டதில், ஸ்பெயின் நாட்டில் உள்ள Community of Madrid பகுதி மக்களே அதிக ஆயுட்காலம் உயிர் வாழ்வதாக தெரியவந்துள்ளது.

இங்குள்ள மக்களின் சராசரி ஆயுட்காலம் 85.2 என தெரியவந்துள்ளது. இரண்டாவது இடத்தில் அதிகமாக இத்தாலிய மொழி பேசும் சுவிட்சர்லாந்தின் டிசினோ மாகாணம் உள்ளது. இங்குள்ள மக்களின் சராசரி ஆயுட்காலம் 85 வயது.

3-வது மற்றும் 4-வது இடத்தில் ஸ்பெயின் நாட்டின் Castile-León மற்றும் La Rioja உள்ளது. இங்குள்ள மக்களின் சராசரி ஆயுட்காலம் 84.3 வயது.

5-வது இடத்தில் இத்தாலியின் Trentino பகுதி உள்ளது. சுவிஸில் சூரிச் நகர மக்களின் சராசரி ஆயுட்காலம் 83.9 என தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி பெர்ன், ஃப்ரீபோர்க், சோலொட்டர்ன், நியூச்சுடெல் மற்றும் ஜூரா ஆகிய பகுதிகளில் குடியிருக்கும் மக்களின் சராசரி ஆயுட்காலம் 83.1 எனவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் ஆண்களை விடவும் பெண்களே அதிக நாட்கள் உயிர் வாழ்கின்றனர் எனவும் அந்த ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர்.

பெண்களின் சராசரி ஆயுட்காலம் 85 வயது எனவும், ஆண்களுக்கு 81 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடுகளை பொறுத்தமட்டில் சுவிஸ் மக்களின் சராசரி ஆயுட்காலம் 83.7 எனவும், ஸ்பெயின்(83.5), பிரான்ஸ், லக்ஸம்பர்க் மற்றும் சைப்ரஸ்(82.7) எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்