குப்பை போடுபவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கும் சுவிட்சர்லாந்து!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து மாகாணம் ஒன்று குப்பை போடுபவர்களுக்கு கடும் அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது.

சுவிட்சர்லாந்து மாகாணமாகிய Aargauவில் குப்பை போடுபவர்களுக்கு 300 ஃப்ராங்குகள் வரை அபராதம் விதிக்க அம்மாகாண நாடாளுமன்றம் முடிவு செய்துள்ளது.

நேற்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த முடிவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

தற்போது இம்மாகாணத்தின் பல நகராட்சிகள் குப்பை போடுபவர்களுக்கு 40 முதல் 100 ஃப்ராங்குகள் வரை அபராதம் விதிக்கின்றன.

இந்த அபராதத்தை கடுமையாக்க நாடாளுமன்றம் முடிவு செய்துள்ளது.

Aargauவில் அதிகபட்ச அபராதம் 300 ஃப்ராங்குகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Aargauவிலுள்ள பெரும்பாலான கட்சிகள் இந்த அபராதத்தை வரவேற்றுள்ளன.

FDP மட்டுமே இந்த முடிவை எதிர்த்துள்ளது.

புதிய அபராதம் Aargauவில் அக்டோபர் மாதம் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வர உள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்