கருக்கலைப்புக்கு மறுப்பு... காதலனின் கொடுஞ்செயல்: சுவிஸ் இளம்பெண் எடுத்த முடிவு

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில், தனது கருவை கலைக்க, காதலன் வயிற்றில் ஓங்கி மிதிக்க முயன்ற சம்பவத்தை இளம்பெண் ஒருவர் பகிர்ந்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் கருக்கலைப்பு சம்பவம் அதிகரித்துவருவதாக தகவல்கள் வெளியான நிலையில் உள்ளூர் பத்திரிகை ஒன்று,

இதுபோன்ற சூழலை எதிர்கொண்ட பெண்கள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்துகொள்ளலாம் என கோரிக்கை வைத்தது.

அதிலேயே, தற்போது 23 வயதாகும் இளம்பெண் ஒருவர் தமக்கு நேர்ந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

19 வயதில் காதலனால் தாம் கர்ப்பமானதாக கூறும் அவர், கர்ப்பம் உறுதியானது முதல், கருவை கலைக்கவே தமது காதலன் கட்டாயப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

ஒருகட்டத்தில் தமது வயிற்றில் ஓங்கி மிதிப்பேன் என மிரட்டியதாகவும், ஆனால் 19 வயதில் ஒற்றை பெற்றோராக காலம் தள்ள தம்மால் இயலாது என்ற முடிவின் காரணமாக தாம் கருக்கலைப்பு செய்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி 12-வது வாரம் வரையில் தாம் கர்ப்பமாக இருப்பதை மறைத்து வந்ததாகவும், இன்னும் தாமதிக்க முடியாது என்ற கட்டத்திலேயே,

தமது நிலையை காதலரிடம் தெரிவித்ததாகவும், அது பின்னர் கருக்கலைப்பில் முடிவடைந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு மட்டும் சுவிஸில் சுமார் 10,015 பெண்கள் கருக்கலைப்பு செய்து கொண்டதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இதில் 500 பேர் கர்ப்பத்தின் 12-வது வாரத்தில் கருக்கலைப்பு செய்து கொண்டுள்ளனர். 103 பேர் 17-வது வாரத்திற்கு பின்னரும், 41 பேர் 21-வது வாரத்திலும் கருக்கலைப்பு செய்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

கர்ப்பத்தின் 12-வது வாரம் வரை கருக்கலைப்பு செய்துகொள்வது அந்ததந்த பெண்களின் தனிப்பட்ட முடிவு என கூறும் மருத்துவர்கள், 13-வது வாரத்தில் இருந்து முடிவெடுப்பது மருத்துவர்க்ளே எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers