சுவிட்சர்லாந்தில் வயதான பெற்றோரின் தலையை சிதைத்து கொன்ற மகன்: வெளிச்சத்துக்கு வந்த கொடூர சம்பவம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் சொந்த பெற்றோரை டம்பல் கருவியால் தாக்கி கொலை செய்துவிட்டு நாடகமாடிய இளைஞரை பொலிசார் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

பெர்ன் மண்டலத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த நடுங்க வைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

65 மற்றும் 61 வயது பெற்றோர் தங்கியிருக்கும் குடியிருப்புக்கு சென்ற, தற்போது 26 வயதான இளைஞர், டம்பல் கருவியால் அவர்கள் இருவரின் தலையை கொலைவெறியுடன் தாக்கியுள்ளார்.

சுமார் 15 முறை தாக்கியுள்ளதாக விசாரணையில் பின்னர் தெரியவந்தது. இதில் தலை சிதைந்து இரு முதியவர்களும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளனர்.

தொடர்ந்து அங்கிருந்து சென்றுவிட்ட அந்த இளைஞர், மீண்டும் திரும்பி வந்து பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

சம்பவயிடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார் முதியவர்கள் இருவரின் சடலங்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அடுத்த நாள் அந்த இளைஞரிடம் மேற்கொண்ட விசாரணையில் முரணான தகவல்களை அளித்ததால் சந்தேகமடைந்த பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து அதிகாரிகள் முன்னெடுத்த விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

பெர்ன் மண்டலத்தை உலுக்கிய இந்த இரட்டை கொலை வழக்கில் திங்களன்று நீதிமன்ற விசாரணை துவங்கியுள்ளது.

இந்த விசாரணையில், கொலைக்கான நோக்கம் என்ன என்பது வெளிச்சத்துக்கு வரலாம் என நம்பப்படுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...