சுவிஸ் நாட்டவர்களில் 8 சதவிகிதத்தினர் தற்கொலை எண்ணங்களுக்கு உள்ளாகிறார்கள்: ஆய்வு!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரப்படி ஆண்டுதோறும் சுமார் 800,000பேர் தற்கொலை செய்துகொள்கிறார்களாம்.

2016ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 1000பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள், அதாவது 100,000பேருக்கு 12 பேர்.

சமீபத்தில் சுவிஸ் நாட்டவர்களிடம் ஆய்வு ஒன்றில் அவர்களுக்கு தற்கொலை எண்ணம் ஏற்பட்டுள்ளதா என கேட்கப்பட்டது.

அவர்களில் சுமார் 7.8 சதவிகிதம்பேர் தங்களுக்கு தற்கொலை எண்ணம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்கள்.

இதேபோல் முன்பு 2012ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றிலும் 6.4 சதவிகிதம்பேர் தங்களுக்கு தற்கொலை எண்ணம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்கள்.

எனவே ஐந்து ஆண்டுகளில் தற்கொலை எண்ணம் சராசரியாக 22 சதவிகிதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

தற்கொலை எண்ணத்தால் பாதிக்கப்படுவோரில் அதிகம்பேர் கணவன் அல்லது மனைவி இல்லாமல் தனியாக குழந்தைகளை வளர்ப்பவர்கள் (single parents (11.3%) ), வேலை கிடைக்காதவர்கள் (15.3%) உயர்நிலைப்பள்ளி வரை மட்டும் படித்தவர்கள் (12.4%) ஆவர்.

தற்கொலை எண்ணமுடையவர்களில் 47 சதவிகிதத்தினர் மோசமான உடல் குறைபாடு உடையவர்கள்.

அதிர்ஷ்டவசமாக தற்கொலை எண்ணம் ஏற்படுவோரில் பலர் தற்கொலை முயற்சி செய்வதில்லை.

2017இல் சுவிஸ் நாட்டவர்களில் 0.5 சதவிகிதத்தினர் தற்கொலை செய்ய முயன்றார்கள் என புள்ளிவிவரங்கள் தெரிவிகின்றன.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்