சுவிட்சர்லாந்தில் அரசு அலுவலகம் ஒன்றில் பயங்கர தீ விபத்து: மூன்று தீயணைப்பு வீரர்கள் காயம்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்திலுள்ள அரசு அலுவலகம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் கட்டிடம் முழுவதும் எரிந்து நாசமானது.

நேற்று முன் தினம் இரவு Satigny என்ற நகரிலுள்ள Town hall என்னும் அலுவலகத்தில் இந்த விபத்து நடந்துள்ளது.

14 தீயணைப்பு வாகனங்களுடன் 50 தீயணைப்பு வீரர்கள் பற்றியெரிந்த தீயை அணைக்க போராடினர்.

தீ எரியத் தொடங்கி சுமார் ஒரு மணி நேரம் ஆன நிலையில், கட்டிடத்தின் கூரை சரிந்து விழுந்தது.

விழுந்த கூரைக்கடியில் மூன்று தீயணைப்பு வீரர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

எந்த அளவுக்கு சேதம் ஆகியுள்ளது என்பது தொடர்பான தகவல்கள் கிடைக்கவில்லை.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்