சுவிட்சர்லாந்தில் வாகன நிறுத்தத்தில் கத்திக்குத்து காயங்களுடன் ஆண் சடலம்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் லாசேனில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. லாசேனுக்கு அருகிலுள்ள Ouchy என்ற பகுதியில் வாகன நிறுத்தம் ஒன்றில் அவர் இறந்து கிடந்துள்ளார்.

அவரது உடலில் கத்திக்குத்துக்காயங்கள் காணப்பட்டுள்ளன.

நேற்றிரவு, அந்த பக்கமாக நடந்து சென்ற வழிப்போக்கர்கள் அவரது உடலைக் கண்டு பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்கள்.

பொலிசார் தாங்கள் அந்த சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகவும், இன்னமும் அந்த நபர் முறைப்படி அடையாளம் காணப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்