சுவிட்சர்லாந்து முழுவதும் கூடி சத்தமிட்ட பெண்கள்: வீடியோவின் பின்னணி!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து தெருக்களில் கூடிய பெண்கள் அலறி கூக்குரல் எழுப்பினர். கூக்குரலுக்கு காரணம்?

இந்த அலறல் உணர்வு சம்பந்தப்பட்டது என்கிறார் Roxanne Errico (19). நான் எனக்காக சத்தமிடுகிறேன், அதே நேரத்தில் எனது சகோதர சகோதரிகளுக்காகவும் சத்தமிடுகிறேன்.

என் தாய் உயிரோடிருந்தால் அவரும் என்னுடன் சேர்ந்து சத்தமிட்டிருப்பார் என்று கூறும் Roxanneஉடைய தாய் அவரது முரட்டு காதலரால் கொலை செய்யப்பட்டார்.

ஆம், ஆண் பெண் சம உரிமை கோரியும், ஆண்களுடைய வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சுவிட்சர்லாந்து பெண்கள் இந்த நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுவிட்சர்லாந்தில் வாழ்க்கைத்தரம் உயர்ந்ததாக இருந்தாலும், ஆண் பெண் ஊதியங்களில் கடும் வேறுபாடு காணப்படுகிறது.

பெண்களுக்கு ஆண்களின் ஊதியத்தில் ஐந்தில் ஒரு பங்குதான் கொடுக்கப்படுகிறது. ஆகவே, இதை எதிர்த்து ஜெனீவா மற்றும் பிற நகரங்களில் ஆயிரக்கணக்கான பெண்கள் கூடி சரியாக மணி 3.24 தொடங்கி ஒரு நிமிடத்திற்கு சத்தம் எழுப்பினர்.

அது, பெண்கள் தங்கள் ஊதிய உயர்வு வேறுபாட்டையும் தாண்டி இலவசமாக உழைக்கத்தொடங்கிய நாளின் நேரத்தைக் குறிப்பதற்காக!

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்