அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட பெண்மணி... கிடைத்த முரண்பட்ட சோதனை முடிவுகள்: ஆனால் கடைசியில்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
234Shares

சுவிட்சர்லாந்தில் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட பெண்மணி ஒருவருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டபோது, அவருக்கு கொரோனா இல்லை என முதலில் சோதனை முடிவுகள் தெரிவித்தன.

பேஸல் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 81 வயது பெண்மணி ஒருவருக்கு கொரோனாவைக் கண்டறியும் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அந்த சோதனையின் முடிவுகள் அவருக்கு கொரோனா இல்லை என்று கூறின.

6 வாரங்களுக்குப் பிறகு அவருக்கு கொரோனாவைக் கண்டறியும் ஆன்டிபாடி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அந்த சோதனையும் அவருக்கு கொரோனா இல்லை என்றே கூறியது.

ஆனால், அந்த பெண்மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்குப்பின், அவரது தோலில் கொப்புளம் இருந்த இடத்தில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு, அந்த தோல் மாதிரிகளில் கொரோனாவைக் கண்டறியும் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஆச்சரியப்படும் விதமாக அந்த தோல் மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில், அவருக்கு கொரோனா இருப்பதாக முடிவுகள் வந்தன.

இந்த கண்டுபிடிப்பு மிகவும் முக்கியமானது என்று கூறியுள்ள மருத்துவர்கள், தற்போது கொரோனாவைக் கண்டறிவதற்காக பயன்படுத்தப்படும் PCR பரிசோதனை மற்றும் ஆன்டிபாடி பரிசோதனை ஆகிய இரண்டிலும் குறைபாடுகள் உள்ளதை இந்த விடயம் வெளிப்படுத்தியுள்ளது என்கிறார்கள்.

அத்துடன், அவருக்கு ஆறு வாரங்கள் கழித்து எடுக்கப்பட்ட ஆன்டிபாடி பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என முடிவுகள் வந்ததிலிருந்து, அவர் உடலில் கொரோனா வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகள் உருவாகவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

இதுவும் முக்கியம், காரணம், சில நோயாளிகள் உடலில் சில வகை கொரோனா வைரஸ்கள் நுழைந்து நோய் உண்டாக்கினாலும், அந்த வைரஸுக்கு எதிராக அவர்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி (humoral immunity) உருவாகுவதில்லை என்ற உண்மையும் இதிலிருந்து தெரியவந்துள்ளது.

ஆகவே, அந்த பெண்மணியிடம் நடத்தப்பட்ட சோதனைகளின் முடிவிலிருந்து, இனி கொரோனாவைக் கண்டறிவதற்கு PCR பரிசோதனை மற்றும் ஆன்டிபாடி பரிசோதனை மட்டுமின்றி தோலிலிருந்தும் மாதிரி எடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்படுவது நல்லது என்கிறார்கள் அந்த சோதனைகளை மேற்கொண்ட மருத்துவர்கள்!

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்