உலோகங்கள் பொதுவாக மின்னைக் கடத்துகின்ற அதேவேளை வெப்பத்தையும் கடத்தக்கூடியனவாகவே காணப்படுகின்றன.
எனினும் விதிவிலக்காக மின்னைக் கடத்தியபோதிலும் வெப்பத்தை கடத்தாக உலோகம் ஒன்றினை ஆராய்ச்சியாளர்கள் இனங்கண்டுள்ளனர்.
இதன் காரணமாக மின்னைச் செலுத்தும்போதும் இவ் உலோகம் ஒருபோதும் வெப்பமடையாது.
எனவே எதிர்காலத்தில் நீண்ட தூர மின்சார விநியோகத்திற்கு பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் உலோகம் 2017 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டிருந்த போதிலும் தொடர்ச்சியாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையிலேயே தற்போது இதன் சிறப்பியல்பு வெளிப்பட்டுள்ளது.
இதேவேளை வனேடியம் டைஒக்சைட் எனும் உலோகம் 30 டிகிரி செல்சியஸ் வரையான வெப்பத்தை கடத்தாது என்பதுடன் 60 டிகிரி செல்சியசிற்கு மேற்பட்ட வெப்பத்தினை வழங்கும்பேது செங்கீழ் கதிர்களை பிறப்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.