பேஸ்புக் மூலம் இருமுறை பணத்தை இழந்த நபர்: உங்களுக்கும் இப்படி நடக்கலாம்

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

நபர் ஒருவர் தன்னிடமிருந்த தளபாடங்களை பேஸ்புக் மூலம் விற்க முனைந்து இருமுறை தனது பணத்தை இழந்த சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

பேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருந்த தளபாட விற்பனை தொடர்பான தகவல்களை பார்வையிட்ட மோசடிக்கார நபர் ஒருவர் குறித்த தளபாடங்களை கொள்வனவு செய்ய ஆவலாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதற்கான பணத்தினை Google Pay அல்லது Paytm மூலம் செலுத்துவதற்கு விரும்புவதாகவும் தெரிவித்து விற்பனையாளரின் தகவல்களை பெற்றுக் கொண்டுள்ளார்.

இதனை அடுத்து தனது கணக்கிலிருந்து பணம் குறைவடைந்திருப்பதனை விற்பனையாளர் அவதானித்துள்ளார்.

இரண்டு தடவைகள் இவ்வாறு இடம்பெற்றுள்ளது.

இதன் மூலம் இந்திய மதிப்பில் ஒரு இலட்சம் ரூபாவினை அவர் இழக்க நேரிட்டுள்ளது.

மொபைல் வாட்லட் சேவைகள் மூலம் இவ்வாறன பண மோசடிகள் இடம்பெறுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்