பிரித்தானிய பெண் தற்கொலைக்கு ரியோ ஒலிம்பிக் போட்டி காரணமா?

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரேசிலில் பிரித்தானியாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதற்கு ரியோ ஒலிம்பிக் போட்டிதான் காரணம் என்று கூறப்படுகிறது.

பிரித்தானியாவை சேர்ந்த Zoe Louise Robinson என்ற இளம் பெண் பிரேசில் நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

இவர் மற்றும் இவரது நண்பர்கள் பிரேசிலின் Salvador என்ற நகரில் உள்ள Bahia do Sol எனும் ஹொட்டலில் தங்கி வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் பிரேசிலில் நடைபெற்று வரும் ரியோ ஒலிம்பிக் போட்டிகளை கண்டுகளித்து வந்துள்ளனர்.

Zoe Louise Robinson மற்றும் அவரது நண்பர்கள் கடந்த சனிக்கிழமை Salvador பகுதியில் உள்ள இரவு விடுதியில் Nigeria மற்றும் Denmark அணிகள் மோதிய ஒலிம்பிக் போட்டிகளை காண சென்றுள்ளனர். அதன் பின்னர் அவர்கள் இரவு தங்கள் அறைகளுக்கு சென்றுவிட்டனர்.

ஆனால் மறுநாள் காலை 5 மணி அளவில் யாரும் எதிர்பார்க்காத வகையில் Zoe Louise Robinson அங்குள்ள ஜன்னல் வழியாக 9வது மாடியில் இருந்து கிழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவத்தை அறிந்த பிரேசில் பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பெண்ணின் மரணம் குறித்து பெற்றோர்களுக்கு தகவல் அனுப்பியுள்ளதாகவும் கூறினர்.

மேலும் Zoe Louise Robinson தற்கொலை செய்துகொள்வதற்கு முன் அன்று(சனிக்கிழமை) இரவு நண்பர்களுக்குள் வாக்குவாதம் நடந்துள்ளது. இதன் காரணமாக கூட அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments