பிரித்தானிய பிரதமரை கடுமையான வார்த்தைகளால் எச்சரிக்கை செய்த ஆளுநர்

Report Print Peterson Peterson in பிரித்தானியா

பிரித்தானிய நாட்டின் பிரதமரான தெரசா மேவை இங்கிலாந்து வங்கியின் ஆளுநர் கடுமையான வார்த்தைகளால் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு தினங்களுக்கு முன்னர் கன்சர்வேட்டி கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.

இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பிரதமர் தெரசா மே இங்கிலாந்து வங்கியின்(Bank Of England) செயல்பாடுகளை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அப்போது, ‘இங்கிலாந்து வங்கியின் கொள்கை முடிவுகள் வங்கியில் பணம் சேமிக்கும் நபர்களின் வட்டி விகிதத்தையும், ஓய்வூதியம் பெறும் முதியவர்கள் மற்றும் இளைஞர்களை பெருமளவில் பாதித்துள்ளது’ என கடுமையாக சாடியுள்ளார்.

பிரதமர் தெரசா மேயின் இந்த விமர்சனத்திற்கு இங்கிலாந்து வங்கியின் ஆளுநரான மார்க் கார்னி நேற்று தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

அப்போது, ‘என்னுடைய பணியை எப்படி செய்ய வேண்டும் என நீங்கள்(தெரசா மே) எனக்கு கற்றத்தர வேண்டாம்.

வங்கியின் வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்யவும், வங்கியின் பண பரிவர்த்தனை தொடர்பான கொள்கை முடிவு எடுக்கவும் உங்களுடைய தலையீடு அவசியம் இல்லாதது.

முந்திய அரசியல் தலைவர்களின் ஆலோசனைப்படி தான் வங்கியின் கொள்கை முடிவுகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன. இவற்றை அடிப்படையாக கொண்டு தான் வங்கி செயல்பட்டு வருகிறது.

இதுபோன்ற ஒரு சூழலில் வங்கியின் செயல்பாடு குறித்து பிரதமர் எதிர்மறையாக விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை’ என ஆளுநர் காரசாரமாக பதில் அளித்துள்ளார்.

இதுமட்டுமில்லாமல், பிரத்தானிய சான்சலரான பிலிப் ஹம்மோண்ட் என்பவரிடம் ஆளுநர் பிரதமர் குறித்து புகார் அளித்துள்ளார்.

இப்புகாரை தொடர்ந்து ‘இங்கிலாந்து வங்கியின் தன்னாட்சி நிர்வாகத்தில் நீங்கள் தலையீடு செய்ய வேண்டாம்’ என சான்சலர் பிரதமர் தெரசா மேவிற்கு அறிவுரை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments