வாடகை வேண்டாம்....இது மட்டும் போதும்: வீட்டு உரிமையாளர்களின் அத்துமீறல்

Report Print Peterson Peterson in பிரித்தானியா
411Shares
411Shares
lankasrimarket.com

பிரித்தானிய நாட்டில் வசிப்பதற்கு வீடு இல்லாத ஆண்கள் மற்றும் பெண்கள் வாடகைக்கு பதிலாக உரிமையாளர்களிடம் உறவில் ஈடுப்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்து நாட்டில் அண்மைக் காலமாக ஒரு அதிர்ச்சிகரமான நடைமுறை வேகமாக பரவி வருகிறது.

அதாவது, ’தன்னிடம் வீடு வாடகைக்கு உள்ளது எனவும், வாடகை கட்டணத்திற்கு பதிலாக தன்னிடம் உறவு வைத்துக்கொள்ள விருப்பமுள்ளவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்’ என வீட்டு உரிமையாளர்கள் விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றனர்.

துரதிஷ்டவசமாக, வேறு வழியின்றி வசிக்க வீடு இல்லாத ஆண்களும் பெண்களும் உரிமையாளரின் விருப்பத்திற்கு சம்மதம் தெரிவித்து அவர்களுடன் தங்கி வருகின்றனர்.

இது குறித்து சமீபத்தில் லண்டன், ரோசெஸ்டர், பிரைட்டன் உள்ளிட்ட சில நகரங்களில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில் வீடு இல்லாத 403 பேரிடம் இது குறித்து விசாரணை செய்யப்பட்டது.

இதன் முடிவில், 25 சதவிகித நபர்கள் ‘வாடகை கட்டணத்திற்கு பதிலாக உரிமையாளருடன் உறவு வைத்துக்கொண்டு வசித்து வருவது உண்மை தான்’ என பதிலளித்துள்ளனர்.

மேலும், வீட்டு உரிமையாளருடன் இதுபோன்ற ஒரு ஒப்பந்தம் வைத்துக்கொண்டு குடியேற எங்களுக்கு விருப்பம் உள்ளது என 14 சதவிகித நபர்கள் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்து நாட்டில் இதுபோன்ற ஒப்பந்தங்களில் ஈடுப்படுவதற்கு சட்டப்பூர்வமாக தடையில்லை. ஆனால், இதனால் வீடு இல்லாத பெண்கள் பெரும் துன்பதற்கு ஆளாக நேரிடும் என பெண்கள் நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Peter Kyle என்பவர் இது குறித்து கருத்து தெரிவித்தபோது, உரிமையாளர்கள் மூலம் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக நேரிடும் இதுபோன்ற வழக்கத்தை சட்டத்திற்கு எதிரானது என அரசு அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments