லண்டனில் பொலிசார் செயலை கண்டித்து போராட்டம்: பொருட்களுக்கு தீவைப்பு

Report Print Raju Raju in பிரித்தானியா

பொலிஸ் அதிகாரி ஒருவருடன் கருப்பின இளைஞருக்கு ஏற்பட்ட தகராறுக்கு பின்னர் இளைஞர் மரணமடைந்த நிலையில், பொலிஸ் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது.

Rashan Charles (20) என்ற இளைஞர் லண்டனின் Dalston மாவட்டத்தில் உள்ள ஒரு கடையில் இருந்தார்.

அப்போது கடைக்கு உள்ளே சென்ற காவல் அதிகாரி ஒருவர் Charles-ஐ பிடித்து கீழே தள்ளியுள்ளார். பின்னர் Charles எழுந்து நிற்க முடியாதவாறு அவரை காவல் அதிகாரி கெட்டியாக தரையிலேயே படுக்க வைத்து பிடித்து கொண்டார்.

அவருக்கு உதவியாக கடையில் இருந்த இன்னொரு நபர் செயல்ப்பட்டார். இதையடுத்து காயம் அடைந்த Charles மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனளிக்காமல் Charles-ன் உயிர் பிரிந்தது. கடையில் நடந்த மோதல் சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலானது.

காவல் அதிகாரியின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 150 பேர் வடக்கு லண்டனில் உள்ள காவல் நிலையம் முன்னர் போராட்டம் நடத்தினார்கள்.

போராட்டத்தின் போது அங்கிருந்த குப்பை தொட்டிகள் தீவைத்து கொளுத்தப்பட்டன. Charlesன் இறப்பு தங்களை கோபமடைய செய்துள்ளதாக கூறிய போராட்டகாரர்கள், இனவெறிக்கு எதிராக நிற்போம் என எழுதப்பட்ட பதாகைகளை கையில் வைத்திருந்தார்கள்.

அங்கிருந்த பொலிஸ் அதிகாரி கூறுகையில், Charles தன் வாயில் எதோ ஒரு பொருளை போட்டு கொள்ள முயன்றுள்ளார்.

அதை தடுக்கும் முயற்சியை தான் அங்கிருந்த காவல் அதிகாரி செய்தார் என கூறியுள்ளார்.

Charlesன் இறப்பு அவர் சமூக மக்களை பாதித்துள்ளதை நாங்கள் உணர்ந்துள்ளோம் என பொலிசார் கூறியுள்ளனர்.

சம்பவம் குறித்து Independent Police Complaints Commission (IPCC) விசாரணை நடத்தி வருகிறது.

சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகிறோம். முழு விவரங்களை சேகரித்தவுடன் மக்கள் பார்வைக்கு அதை வெளியிடுவோம் என IPCC கூறியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers