75 மில்லியன் பவுண்ட்ஸ் நிதி ஒதுக்கவுள்ள பிரித்தானிய அரசு: விரைவில் வெளியாகும் அறிவிப்பு

Report Print Santhan in பிரித்தானியா

2021-ஆம் ஆண்டுக்குள் ஓட்டுநரில்லா கார்கள் அறிமுகம் மற்றும் மின்சார கார்களை அறிமுகப்படுத்தும் திட்டத்துக்கு பிரித்தானியா அரசு சுமார் 75 மில்லியன் பவுண்டஸ் ஒதுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிரித்தானியாவில் 2035-ஆண்டுக்குள் பெட்ரோல் மற்றும் டீசல் கார்கள் முற்றிலும் இருக்ககூடாது என்ற நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருகிறது.

ஓட்டுநரில்லா கார் தொழில்நுட்ப மேம்பாட்டில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு நிதி உதவி அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஓட்டுநரில்லா கார்கள் அறிமுகம் மற்றும் மின்சார கார்களை அறிமுகப்படுத்தும் திட்டத்துக்கு 75 மில்லியன் பவுண்ட்ஸ் நிதி ஒதுக்கப்படும் என்றும், தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு மொத்தமாக 400 மில்லியன் பவுண்டஸ் அரசு ஒதுக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்த அறிவிப்பை பிரித்தானிய நிதி அமைச்சர் பில் ஹாமண்ட் விரைவில் அறிவிப்பார் என்று நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்