வருங்கால மனைவிக்காக பிரித்தானிய இளவரசர் ஹரி செய்துள்ள தியாகம்

Report Print Raju Raju in பிரித்தானியா

மேகன் மெர்க்கல் வேண்டுகோளுக்கு இணங்க இளவரசர் ஹரி புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டு விட சம்மதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய இளவரசர் ஹரி பள்ளிக்கூடம் படிக்கும் போதே புகைப்பிடிக்கும் பழக்கத்தை தொடங்கினார், இது ராணுவத்தில் அவர் இருக்கும் போதும் தொடர்ந்தது.

ஹரி புகைப்பிடிப்பதை அவர் தந்தை சார்லஸ் விரும்பவில்லை என்றாலும் அதை தொடர்ந்து வந்தார்.

ஒரு சமயம் நாள் ஒன்றுக்கு 20 சிகரெட்களை ஹரி புகைப்பார் என தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் தனது வருங்கால மனைவி மேகன் மெர்க்கலுக்கு வேண்டுகோளுக்கு இணங்க உடல் நலத்தை கருத்தில் கொண்டு ஹரி புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டு விட முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹரி சில நிகழ்ச்சிகளின் போது பொது வெளியில் புகைப்பிடிப்பது போன்ற புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers