பிரித்தானியாவில் அப்பளம் போல் நொறுங்கிய கார்: ஒருவர் பலி

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று கார் விபத்து காரணமாக ஒருவர் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் Liverpool நகரத்தின் Old Swan பகுதியில் இருக்கும் Prescot சாலையில் கிறிஸ்துமஸ் தினமான இன்று அதிகாலை உள்ளூர் நேரப்படி 04.30 மணி அளவில் அதிவேகமாக சென்ற கார் ஒன்று சாலையில் இருந்த விளக்கு தூண் மீது மோதியதால் அப்பளம் போல் நொறுங்கியுள்ளது.

இந்த விபத்தில் காரின் உள்ளே இருந்த நபர் படு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த விபத்திற்கு காரணமான ஓட்டுனருக்கு பெரிய அளவிலான காயம் இல்லை என்பதால், அவரை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த விபத்தின் காரணமாக Prescot சாலையை பொலிசார் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருப்பதாகவும், அவ்வழியே வரும் வாகனங்கள் மாற்றுப் பாதை வழியே திசை திருப்பிவிடப்படுவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்