ஐன்ஸ்டின் பிறந்த தினத்தில் மறைந்த ஸ்டீபன் ஹாக்கிங்! ஆச்சரிய ஒற்றுமை

Report Print Athavan in பிரித்தானியா

உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானிகளான ஆல்பர்ட் ஐன்ஸ்டின்னுக்கும், ஸ்டீபன் ஹாக்கிங்குக்கும் இடையே பல ஒற்றுமைகள் உள்ளன.

இந்த இருபெரும் விஞ்ஞானிகள் இல்லை என்றால் இன்றைய அறிவியலை நாம் நினைத்து கூட பார்க்க முடியாத நிலையில் வளராமல் இருந்திருக்கும்.

ஆனால் இவரையும் உற்று நோக்கினால் இவர்களிடம் பல விஷயங்கள் ஒரே மாதிரியாக இருப்பது தெரியும்.

ஐன்ஸ்டின் பள்ளியில் படிக்கும் போது அவரை பலரும் முட்டாள் என்றுதான் அழைத்தனர். அதே போல் தான் ஸ்டீபன் ஹாக்கிங்ஸையும் முட்டாள் என்று தான் அழைப்பார்களாம் இவ்வளவு ஒற்றுமை உள்ள இவர்களின் பிறப்பு இறப்பு இரண்டிலும் கூட ஒற்றுமை உள்ளது.

ஐன்ஸ்டின் 1879 மார்ச் 14ல் பிறந்தார், இன்று அதே மார்ச் 14ல் ஹாக்கிங் மரணம் அடைந்து இருக்கிறார். சொல்லிவைத்தார்ப்போல் இருவருக்கும் மூளை நரம்பியல் குறைபாடு இருந்துள்ளது.

இதுமட்டும் அல்லாமல் இருவரின் வாழ்நாளும் 76 ஆண்டுகள் மட்டுமே, ஆம் ஐன்ஸ்டின் இறந்தத்தும் ஹாக்கிங் இறந்ததும் 76 வயதில் தான்.

ஐன்ஸ்டின்க்கு பிறகு ஹாக்கிங்கின் அசாத்திய அறிவியல் திறமையால் அவரை அடுத்த ஐன்ஸ்டின் என்று பலரும் அழைத்தனர், ஆனால் பல முறை தானும் அவரும் வேறு வேறு என்று ஹாக்கிங் நிரூபித்து இருக்கிறார்.

ஒருவரது அறிவாற்றலை அறியும் ஐக்யூ தேர்வில் இருவரது ஐக்யூவும் 160க்கும் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்