பிரித்தானிய அரச குடும்ப வரலாற்றில் முதல் முறையாக

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

பிரித்தானியாவின் குட்டி இளவரசி சார்லோட் விரைவில் அரசியாக அரியணை ஏறி புதிய வரலாற்றை உருவாக்கவிருக்கிறார்.

இளவரசர் வில்லியம்- கேட் மிடில்டன் தம்பதியினருக்கு, ஜார்ஜ், சார்லோட் என இரு குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது 3வதாக கேட் கருவுற்றிருக்கிறார்.

குழந்தை பிறக்கும் திகதி நெருங்கிவிட்ட நிலையில், பிறக்கும் குழந்தை ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என்பது தெரியவில்லை.

ஆனால், மூன்றாவது பிறக்கும் குழந்தை எந்த பாலினத்தை சேர்ந்த குழந்தையாக இருந்தாலும், அக்குழந்தை பிறக்கும்போது, சார்லோட் முக்கியத்துவம் பெறுகிறார்.

ஏனெனில், Crown Act of 2013 சட்டத்தின்படி, இரண்டாவது பெண் குழந்தையாக பிறந்த சார்லோட் பிரித்தானிய அரச குடும்பத்தின் அரசியாக அரியணையில் அமரவிருக்கிறார். அரச குடும்பத்தின் முதல் பெண் அரசியாகவிருக்கிறார்.

இதே நேரம், இளவரசர் ஜார்ஜ் ஒரு பெண் குழந்தையாக இருந்திருந்தால், அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கும்.

ஆனால், ஜார்ஜ்க்கு முன்னர், அவரது தாத்தா சார்லஸ் மற்றும் தந்தை வில்லியம் ஆகிய இருவரும் அரியணை ஏறுவதற்கு வரிசையில் இருப்பதால், அவர்களுக்கு பின்னர் தான் இவருக்கு க்ரீடம் சூட்டப்படும்.

எனவே, பெண் குழந்தைகளின் வரிசையில் இளவரசி சார்லோட் முதலில் இருக்கிறார். 1701 ஆம் ஆண்டில் அரச குடும்ப சட்டப்படி, சகோதரர்கள் தங்களுடைய சகோதரிகளுக்கு முன்பாகவே எப்பொழுதும் பொறுப்பை ஏற்பார்கள்.

ஆனால், Crown Act of 2013 சட்டத்தின் படி இதில் மாற்றம் செய்யப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்