வைரலாகும் மேகனின் பழைய வீடியோ

Report Print Gokulan Gokulan in பிரித்தானியா

பிரித்தானியாவின் எதிர்கால இளவரசியான மேகன் மெர்க்கல் குறித்த செய்திகள் நாளுக்கு நாள் வந்து கொண்டிருக்கிறன.

இந்நிலையில் அவரது 11 வயதில் கலையில் சிறந்து விளங்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

அந்த வயதிலேயே, தனது பள்ளி ஆசிரியைகளுக்கு விருது வழங்கி சிறப்பிக்கும் நிகழ்வை நடத்தியுள்ளார்.

'Broadway Comes To Hollywood" என்பதுதான் இந்த நிகழ்வின் பெயர். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் போலவே இதனை வடிவமைத்திருந்தனர்.

பாடல் மற்றும் ஆடல்களுக்கு இடையில் ஆசிரியர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களை அழைத்து விருதையும் கொடுத்துள்ளனர்.

இந்த நிகழ்வின் ஆரம்பத்தில் மைக்கைப் பிடித்த மெர்கல் ஆரம்பத்தில் சற்று தடுமாறினாலும் பின்பு சுதாரித்து "கடந்த ஒன்பது வருடமாக எங்களைப் பக்குவப்படுத்தி வழிகாட்டிய அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி " என்று அவர் நிகழ்வைத் தொடர்ந்த விதம் கம்பீரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது

இதுகுறித்து மேகனின் தோழியின் அம்மாவான நினக்கி கூறுகையில், மேகன் எங்கிருந்தாலும் அவரது தடயத்தை அழுத்தமாகப் பதித்து விட்டு செல்வது அவரது வழக்கம், மேகனிடம் தலைமைப்பண்பு உள்ளது.

அத்தனை பேரையும் ஒன்றிணைப்பதை எப்போதும் சிறப்பாக செய்வார், எதிலும் கச்சிதத்தை எதிர்பார்க்கும் அவரது இந்த குணமும் தைரியமும்தான் அவருக்கு கவசம் என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்