உலகின் முதல் கருப்பு சுறா பிரித்தானியாவில் கண்டுபிடிப்பு!

Report Print Kabilan in பிரித்தானியா

பிரித்தானியாவின் தென்மேற்கு கடல் பகுதியில், உலகின் முதன்முறையாக கருமை நிறத்தாலான சுறா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகில் ஏராளமான வகையைச் சேர்ந்த சுறா மீன்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலான சுறாக்கள் வெள்ளை மற்றும் சாம்பல் நிறத்தில் தான் இருக்கும்.

இந்நிலையில், மிகவும் அரிதாக கருமை நிறத்திலான சுறா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் தென்மேற்கு கடல் பகுதியில் கருமை நிறத்திலான சுறா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சுறா ஏறத்தாழ 24 அடி நீளமுடையது.

இந்த சுறா மீனை Rachel Hosken என்பவர் முதன்முறையாக படம் பிடித்துள்ளார். இவர் படம் பிடிக்கும்போது இந்த சுறா மீன் பொறுமையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers