காதலியை கொலை செய்து பல்லை நெக்லஸாக அணிந்த காதலன்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா
311Shares
311Shares
lankasrimarket.com

இங்கிலாந்தில் காதலியை கொலை செய்து அவரது பற்களை நெக்லஸாக அணிந்துகொண்ட காதலனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

Dean Lowe - Kirby Noden ஆகிய இருவரும் காதலித்து வந்ததால், Cornwall- இல் உள்ள ஒரு வீட்டில் சில ஆண்டுகளாக வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் Dean தனது காதலியை கொலை செய்து, அவரது உடல்பாகங்களை துண்டு துண்டாக வெட்டி கழிவறைக்குள் வீசியுள்ளார். மேலும் தனது காதலியின் பல் ஒன்றை எடுத்து நெக்லஸாக அணிந்துகொண்டார்.

இந்த சம்பவம் நடைபெற்று 4 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், Kirby- ஐ காணவில்லை என அவரது பெற்றோர் தேடியுள்ளனர். காதலன் Dean -யிடம் கேட்டதற்கு அவர் வேறு ஒரு இடத்தில் வசிக்கிறாள் என முன்னுக்கு பின் முரணமாக பதிலளித்துள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர், இதுகுறித்து பொலிசில் புகார் அளித்ததையடுத்து, பொலிசார் Dean-யின் வீட்டை சோதனை செய்ததில், ரத்தக்கறைகள் இருந்துள்ளன.

இதனால் சந்தேகம் வலுத்ததையடுத்து, Dean-யிடம் நடத்தப்பட்ட விசாரணையில், எனது காதலி வேறு ஒரு நபரை திருணம் செய்துகொண்டு வசிக்கிறார் என கூறியவர், அதற்கான சாட்சியங்களை காட்டுவதற்கு மறுத்துவிட்டார்.

தனது காதலியை கொலை செய்யவில்லை எனவும் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இருப்பினும் சாட்சியங்கள் அவருக்கு எதிராக உள்ளதால், அவர் மீது வழக்குதொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்