திருமணத்துக்கு அழைக்கலயே: ஆனாலும் லண்டனுக்கு வந்த மெர்க்கலின் அண்ணி

Report Print Raju Raju in பிரித்தானியா
442Shares
442Shares
ibctamil.com

பிரித்தானிய இளவரசர் ஹரி - மேகன் மெர்க்கல் திருமணத்துக்கு அழைக்கப்படாத நிலையில் மெர்க்கலின் அண்ணன் மனைவி மற்றும் மகன்கள் லண்டனுக்கு வந்துள்ளனர்.

மெர்க்கலின் ஒன்றுவிட்ட அண்ணனான தாமஸ் ஜூனியர் சில தினங்களுக்கு முன்னர் அளித்த பேட்டியில் தனக்கு மெர்க்கல் திருமணத்தில் கலந்து கொள்ள அழைப்பிதழ் வரவில்லை என கூறியிருந்தார்.

இந்நிலையில் அவரின் மனைவியான டிரேசி டூலே மற்றும் அவரின் மகன்களான டைலர் (25) மற்றும் தாமஸ் (26) ஆகியோருக்கும் திருமணத்துக்கு அழைப்பிதழ் தரப்படவில்லை.

ஆனாலும் டிரேசி, டைலர், தாமஸ் ஆகிய மூவரும் லண்டனுக்கு தற்போது வருகை தந்துள்ளனர்.

மூவரும் Heathrow விமான நிலையத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

டிரேசி அமெரிக்க ஒளிபரப்பு நிறுவனத்துக்காக ஹரி - மெர்க்கல் திருமண நிகழ்வை ஒளிபரப்பு செய்வார் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் முன்வரிசையில் நின்று ஹரியையும், மெர்க்கலையும் ஊக்கப்படுத்துவேன் என அவர் கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்