சண்டையை விலக்கிவிட சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்: வெளியான சிசிடிவி காட்சி

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் ட்ராமில் பயணம் செய்த பயணிகளுக்கு இடையே ஏற்பட்ட கடும் மோதலில், பெண் ஒருவர் தாக்கப்பட்டதும் மயக்கமடைந்து கீழே விழும் வீடியோ காட்சியினை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

இங்கிலாந்தின் தலைநகரான மான்செஸ்டரில், பிரபல குத்துசண்டை வீரர் டோனி பெல்லேவ் போட்டி சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

அதனை காண்பதற்கு ஏராளமான ரசிகர்கள் வருகை தந்திருந்தனர். போட்டியின்போதே இரு குழுவினருக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து ட்ராமில் பயணம் செய்துகொண்டிருந்த போது, திடீரென சிலர் சரமாரியாக தாக்கிக்கொள்ள ஆரம்பித்தனர்.

இதனை பார்த்த பெண் பயணி ஒருவர் அவர்களை விலக்கி விட சென்றார். அப்போது ஒருவர் ஆக்கரோசமாக பெண்ணின் முகத்தில் குத்தியதும், அவர் உடனடியாக தரையில் சுருண்டு விழுகிறார். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வாகனத்தின் சிசிடிவியில் பதிவாகியிருந்த காட்சியினை கொண்டு, ஓட்டுநர் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்