படுக்கையில் தோழியுடன் தனது கணவர்: நொறுங்கிப்போன இளம்பெண்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியவைச் சேர்ந்த Abigail Cannings (22), Ross Portsmouth (25) இருவரும் ஒருவரையொருவர் சந்தித்ததும் காதல் பற்றிக் கொண்டது. ஒரே மாதத்தில் இருவரும் சேர்ந்து வாழ ஆரம்பித்தனர். ஆனால் நான்கே மாதங்களில் Rossக்கு காதல் கசந்துவிட்டது.

Abigail உடன் தொடர்ந்து வாழ்வதா இல்லையா என்று தன்னால் உறுதியாகக் கூற முடியவில்லை என்று அவரிடமே கூறியிருக்கிறார்.

அதிர்ச்சியுற்ற Abigail அன்று இரவு அவர்கள் வீட்டில் ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் அமைதியாக இருக்கலாம் என்று முடிவு செய்துள்ளார்.

சரியாக 12 மணிக்கு Rossம் Abigailஇன் நெருங்கிய தோழியுமான Emilyயும் தனியாக வெளியே சென்றிருக்கிறார்கள்.

அவர்கள் அனைவரும் நண்பர்கள் என்பதால் அதைக் குறித்து தவறாக எண்ணாத Abigailக்கு அவர்கள் இருவரும் 4 மணி வரை திரும்பாமல் இருக்கவே சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.

அவர்களை தேடிச் சென்ற Abigail, அவர்கள் இருவரும் நிர்வாணமாக தனது படுக்கையறையில், தனது படுக்கையில் பாலுறவில் ஈடுபட்டதைக் கண்டு அதிர்ந்து போயிருக்கிறார்.

அழுது கொண்டே அந்த அறையை விட்டு வெளியேறிய Abigail, மது அருந்தியிருந்ததால், அங்கிருந்த ஒரு சோபாவிலேயே விழுந்து தூங்கிப் போயிருக்கிறார்.

அவருக்கு மீண்டும் நினைவு திரும்பியபோது, தனக்கு அருகிலேயே மீண்டும் Rossம் Emilyயும் பாலுறவில் ஈடுபட்டதைக் கண்டிருக்கிறார் Abigail.

மனம் நொறுங்கிப்போன Abigail, Rossஉடனான உறவை முறித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார்.

ஆனால் அடுத்த ஒரே வாரத்தில் Rossம் Emilyயும் தங்கள் புதிய வாழ்வை தொடங்கியிருக்கின்றனர்.

தனது காதலனும், தனது நெருங்கிய தோழியும் தனக்கு துரோகம் செய்ததை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை என்கிறார் Abigail.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers