லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது பெண் நீதிபதி செய்த விரும்பத்தகாத செயல்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

லண்டன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே உறங்கிவிட்டதாக பெண் நீதிபதியின் மீது வழக்கறிஞர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்தை சேர்ந்த பார்க்கர் (68) என்பவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தன்னுடைய பட்டப்படிப்பை முடித்தவர்.

இவர் கடந்த 2008-ம் ஆண்டு லண்டன் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். குடும்ப பிரிவில் பணிபுரிந்த பார்க்கர், குழந்தைகள் சம்மந்தமான வழக்குகளை கவனித்து வந்தார்.

இவர் சமீபத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணை ஒன்றின் போது, அசந்து உறங்கிவிட்டதாக வழக்கறிகஞர்களால் குற்றம் சுமத்தப்பட்டார்.

இந்த நிலையில் இதுகுறித்து பேசியிருக்கும் விசாரணை அலுவலக செய்தித்தொடர்பாளர் ஒருவர், சம்மந்தப்பட்ட குடும்பத்தாரால் புகார் வந்ததை அடுத்து, நீதிபதி பார்க்கருக்கு தலைமை நீதிபதியால் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் நீதித்துறை மீது இருக்கும் நம்பிக்கையை குறைக்கும் என கூறியதோடு, பார்க்கருக்கு இந்த முறை பரிவு காட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நீதிபதி பார்க்கர் இதேபோன்று 2016-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு வழக்கின் விசாரணையில் வழங்கிய தீர்ப்பு, அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக இடம்பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers