சிறிய எழுத்துப்பிழையால் ஆபாசமாக மாறிய தாய்- மகன் உரையாடல்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் மகன் அனுப்பிய குறுஞ்செய்தியில் எழுத்துப்பிழை இருந்ததால் அதனை புரிந்துகொள்ள முடியாமல் தாய் ஒருவர் பாலியல் ரீதியிலான அறிவுரை வழங்கியிருக்கும் வினோத சம்பவம் நடந்துள்ளது.

வட அயர்லாந்தை சேர்ந்த ப்ரோகன் என்கிற சிறுவனின் கண்னை சுற்றி சிகப்பு நிறத்திலான கட்டி ஒன்று வந்திருக்கிறது. அதனை சரி செய்வது குறித்து தன்னிடம் தாயிடம் இருந்து அறிவுரை கேட்டுள்ளார்.

இதற்காக அவர் அனுப்பிய குறுஞ்செய்தியில், கட்டி என்பதை குறிப்பிடும் 'stye' என்கிற வார்த்தைக்கு பதில், 'I've got a sti என அனுப்பியிருக்கிறார்.

அதனை படித்த அவருடைய தாய், தன்னுடைய மகன் பாலியல் ரீதியிலான ஒரு தொற்றின் மூலம் பாதிக்கப்பட்டிருப்பதாக நினைத்து அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

'இதனை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு இனிமேல் ஆணுறைகளை அணிந்துகொள்' என அனுப்பியுள்ளார்.

இதை படித்ததும் அதிர்ச்சியடைந்து தன்னுடைய தவறை புரிந்துகொண்ட மகன், 'நன்றி, ஆனால் நீங்கள் தவறாக படித்துவிட்டீர்கள் என நினைக்கிறேன். நான் கூற வந்தது... என தன்னுடைய பாதிக்கப்பட்ட கண் பகுதியை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளார்.

அதனை பார்த்த சிரித்த அந்த தாய், உடனே ஒரு தங்க மோதிரத்தை எடுத்து அந்த இடத்தில் தேய்த்துவிடு என அனுப்பியிருக்கிறார்.

இந்த உரையாடலை அப்படியே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ப்ரோகன் பதிவிட்டதை தொடர்ந்து, 13,000 லைக்குகள் மற்றும் சுமார் 1,000 பேரால் பகிரப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...