கல்வி கட்டணத்திற்காக உடலை விற்கும் பிரித்தானிய மாணவிகள்: அதிர்ச்சி தகவல்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

தங்கள் கல்விச் செலவுகளுக்காக 475,000 பிரித்தானிய கல்லூரி மாணவிகள் தங்கள் உடலை விற்பதாக இணையதளம் ஒன்று அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

Sugar Daddy என்று அழைக்கப்படும் பணக்கார முதியவர்களின் பாலியல் ஆசைகளை நிறைவேற்றி அவர்கள் தரும் பணத்தை தங்கள் கல்லூரி செலவுக்கும் அன்றாட தேவைகளுக்காகவும் இந்த மாணவிகள் பயன்படுத்துகின்றனர்.

கல்விக்கட்டணத்திற்காக கடன் வாங்கி, பின்னர் அதற்கு வட்டி கட்டிக் கொண்டிருப்பதைவிட, பாதுகாப்பான கடனற்ற ஒரு எதிர்காலத்திற்காக இந்த செயலை அவர்கள் செய்வதாக தெரியவந்துள்ளது.

சராசரியாக ஒரு மாணவி மாதம் ஒன்றிற்கு இம்முறையில் 2,900 பவுண்டுகள் வரை சம்பாதிப்பதாக அந்த குறிப்பிட்ட இணையதளம் தெரிவிக்கிறது.

நேரலையில் ஆய்வு ஒன்றை நடத்திய அந்த இணையதளம் அந்த நிமிடத்தில் தங்கள் இணையதளத்தை 111 எடின்பர்க் மாணவிகள் பயன்படுத்திக் கொண்டிருப்பதாக தகவல் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்