விலைமகள் என அழைத்து சித்திரவதை... சொந்த மகளை கொலை செய்த பெற்றோர்: அம்பலமான கொடூர பின்னணி

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவின் வாரிங்டன் பகுதியில் சட்டை அணிந்து அலுவலகம் சென்றதாக கூறி ஏற்பட்ட வாக்குவாதத்தில், பெற்றோரே இளம்பெண்ணை கொலை செய்துள்ள சம்பவத்தின் பின்னணி வெளியாகியுள்ளது.

வாரிங்டன் பகுதியில் பெற்றோருடன் குடியிருந்து வந்தவர் ஷஃபீலியா அகமது.

சம்பவம் நடந்த 2003, செப்டம்பர் 11 ஆம் திகதி, அலுவலகம் சென்ற இவர் புதிதாக வாங்கிய தமது டி-ஷர்ட் ஒன்றை அணிந்து சென்றுள்ளார்.

இந்த விவகாரம் ஷஃபீலியா குடும்பத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமிய சட்டங்களை கடுமையாக கடைபிடிக்கும் ஷஃபீலியாவின் பெற்றோர் இதுதொடர்பாக கேள்வி கேட்டு துன்புறுத்தியுள்ளனர்.

மட்டுமின்றி மேற்கத்திய கலாச்சாரத்தில் நாட்டம் கொண்ட ஷஃபீலியாவை பரத்தை என்றும் வேசி எனவும் அழைத்து துன்புறுத்தி வந்துள்ளனர். மேலும், கடுமையாக தாக்கியும், உணவு தராமல் துன்புறுத்தியும் வந்துள்ளனர்.

இந்த நிலையிலேயே அவர் டி ஷர்ட் அணிந்து அலுவலகம் சென்றுள்ளது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அலுவலகம் முடிந்து குடியிருப்புக்கு திரும்பிய அவரை கேள்வியால் துளைத்த குடும்பத்தினர், ஒருகட்டத்தில் ப்ளாஸ்டிக் பையால் அவரது முகத்தை இறுக்கமாக மூடி கொலை செய்துள்ளனர்.

பின்னர் சடலத்தை 70 மைல்கள் தொலைவில் உள்ள ஆற்றில் விட்டுவிட்டு தப்பியுள்ளனர்.

ஷஃபீலியா கொலை செய்யப்படுவது அவரது சகோதரர்கள் அனைவருக்கும் முன்னிலையில் நடந்துள்ளது.

இச்சம்பவம் நடந்த 9 ஆண்டுகளுக்கு பின்னர் ஷஃபீலியாவின் சகோதரி, 30 வயதான அலீஷா முதன் முறையாக பொலிசாரிடம் முறையிட்டு, நடந்தவற்றை அம்பலப்படுத்தியுள்ளார்.

அதுவரை மாயமானதாக கருதப்பட்ட ஷஃபீலியா வழக்கு, கொலைக் குற்றமாக பதிவு செய்யப்பட்டு மறு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

சுமார் 16 ஆண்டுகள் கடந்த பின்னரும், ஷஃபீலியா தொடர்பில் அவரது சகோதரர்களில் சிலர் இன்னமும் உண்மையை மறைத்து வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

ஷஃபீலியா கொலை செய்யப்பட்டு 5 மாதங்களுக்கு பின்னர் அழுகிய நிலையில் அவரது சடலம் கெண்ட் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டது.

இந்த வழக்கில் 2012 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஷஃபீலியாவின் பெற்றோருக்கு 25 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்