பிறந்ததும் சுற்றி இருந்த அனைவரையும் ஆச்சர்யமடைய வைத்த குழந்தை

Report Print Vijay Amburore in பிரித்தானியா

இங்கிலாந்தில் பற்களுடன் பிறந்த குழந்தையை பார்த்து, அதன் பெற்றோர் உட்பட மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் ஆச்சர்யமடைந்துள்ளனர்.

இங்கிலாந்தை சேர்ந்த நெரிசா உட்வர்ட் (18) என்கிற இளம்பெண் புத்தாண்டு தினத்தன்று, செயின்ட் மேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு அறுவை சிகிச்சையின் மூலம் எமிலியா ஹார்பர் என்கிற பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்காக தூக்கிய அவருடைய தாய் நெரிசா, இரண்டு பற்கள் இருப்பதை பார்த்து ஆச்சர்யமடைந்துள்ளார்.

உடனே தன்னுடைய கணவரிடம் கூறியுள்ளார். கணவரும் அதனை பார்த்துவிட்டு செவிலியரை அழைத்து வந்துள்ளார்.

இதுபோன்று பற்களுடன் குழந்தைகள் பிறப்பது மிகவும் அரிதான ஒன்று எனக்கூறிய அந்த செவிலியர், எங்களுடைய மருத்துவமனையில் இதற்கு முன்னர் இப்படி குழந்தை பிறந்தது இல்லை என கூறியுள்ளார்.

இதுகுறித்து அவருடைய தாய் நெரிசா கூறுகையில், என்னுடைய மகளுக்கு பற்கள் இருப்பதை பார்த்து நாங்கள் அனைவருமே பெரும் ஆச்சர்யம் அடைந்தோம்.

அந்த அழகிய சிறிய பற்களால் தாய்ப்பால் கொடுக்கும்போது எனக்கு மிகவும் சிரமாக இருந்தது. பற்களால் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் அடுத்த ஒரு மணி நேரத்திலே பற்கள் அகற்றப்பட்டது என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்