அம்மா டயானா இறந்த போது... 22 ஆண்டுகளுக்கு பிறகு இளவரசர் வில்லியம் உருக்கம்

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியா இளவரசர் வில்லியம், தனது அம்மாவை இழந்த போது தான் அனுபவித்த வலியும், வேதனையும் பற்றி பகிர்ந்துள்ளார்.

1997 ஆம் ஆண்டு பாரிஸில் இடம்பெற்ற கார் விபத்தில் இளவரசி டயானா உயிரிழந்தார். அப்போது வில்லயம்க்கு 15 வயது, சகோதரர் ஹரிக்கு 12 வயது.

மன ஆரோக்கியம் பற்றி தனியார் தொலைக்காட்சி ஒன்று எடுக்கும் ஆவணப்படம் தொடர்பான நேர்காணலில் கலந்துக்கொண்ட இளவசர் வில்லியம், தனது அன்பான அம்மா இளவரசி டயானாவை இழந்த போது, தான் அனுபவித்த வலிக்கு நிகரானது வேறு ஏதும் இல்லை. ஆனால், அன்புக்குரியவர்களை இழந்த மற்றவர்களுடைய வலியை உணர இது உதவியது.

இளம் வயதில் நமக்கு பிடித்தவர்களை இழக்கும் போது நாம் அனுபவிக்கும் வலிக்கு நிகரானது ஏதுவும் கிடையாது. உங்கள் வாழ்க்கையில் இதை விட மோசமான வலியை நாம் சந்திக்க நேரிடும் அதிலிருந்து மீண்டு வருவது எத்தகைய கடினம் என உங்களுக்கு தெரியும் என தெரிவித்துள்ளார்.

36 வயதான இளவரசர், ஆண்கள் எப்படி தங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்பது குறித்து பிரபல கால்பந்து வீரர்களுடன் கலந்துரையாடினார்.

மேலும், ஆம்புலன்ஸ் விமானியாக தான் பணியாற்றிய போது, சில சமயங்களில் துயர செய்தி கேட்டு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் அனுபவிக்கும் வலியையும், வேதனையும் கண்டு நான் வருத்தப்படுவேன். அது என்னை மிகவும் பாதித்தது, ஆம்புலன்ஸ் விமானி பணியை விடுவதற்கு அதுவும் ஒரு காரணம் என வில்லியம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்