மனைவியின் தங்கையை மணக்க ஆசை! அவரை கொடூரமாக கொன்ற கணவன்.. அடுத்தடுத்து வெளியான தகவல்கள்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானிய பெண்ணை அவரது கணவர் கொடூரமாக கொலை செய்து வீட்டு தோட்டத்தில் புதைத்த நிலையில் கடைசியாக அப்பெண் கணவரிடம் பேசிய வார்த்தைகள் குறித்து தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவின் போல்டனை சேர்ந்தவர் பஹிமா யூசப். இவருக்கும் அகமது சீடட் என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

பஹிமாவும், அகமதும் அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் அகமதுக்கு பாலியல் தொழிலில் ஈடுபடும் பல பெண்களுடன் பழக்கம் ஏற்பட்டது. இதோடு பஹிமாவின் சகோதரி மீது ஆசை கொண்ட அகமது அவரை திருமணம் செய்ய நினைத்தார்.

இதற்கு தடையாக தனது மனைவி பஹிமா இருப்பதாக கருதிய அகமது கடந்தாண்டு ஆகஸ்ட் 31ஆம் திகதி மனைவியை கொலை செய்ய முடிவெடுத்தார்.

அதன்படி இரும்பு கம்பியால் பஹிமாவை தாக்கியும், அவரின் கழுத்தை நெரித்து மூச்சுதிணற வைத்தும் கொலை செய்துள்ளார்.

பஹிமா இறப்பதக்கு முன்னர் ஐ லவ் யூ என தனது கணவரிடம் கூறியுள்ளார்.

ஆனால் கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாமல் பஹிமாவை கொன்ற அகமது தனது வீட்டுக்கு பின்னால் உள்ள தோட்டத்தில் பஹிமாவின் சடலத்தை புதைத்துள்ளார்.

பின்னர் அக்கம்பக்கத்தினரிடம் பஹிமா கண் அறுவை சிகிச்சை செய்து கொள்ள பிரித்தானியாவுக்கு சென்றதாக கூறினார்.

ஆனால் பஹிமாவின் சகோதரியிடம், பஹிமா தன்னை விட்டு ஓடி விட்டதாக கூறியுள்ளார்.

ஆனால் அகமதின் நடவடிக்கையில் பஹிமாவின் தந்தைக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்ட நிலையில் பொலிஸ் புகார் கொடுத்தார்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் அகமதிடம் விசாரித்ததில் அனைத்து உண்மைகளை ஒப்பு கொண்டார்.

இதையடுத்து தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த பஹிமாவின் சடலம் மீட்கப்பட்டது.

பின்னர் கைது செய்யப்பட்ட அகமது மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் 32 ஆண்டுகளுக்கு அவர் பரோலில் வெளியில் வரமுடியாது எனவும் கூறப்பட்டுள்ளது.

ஆனால் நீதிபதியின் தீர்ப்புக்கு முன்னர் தனது மனைவி மீது குற்றஞ்சாட்டியிருந்தார் அகமது.

அதாவது பாலியல் ரீதியாக தன்னிடம் பஹிமா மோசமாக நடந்து கொண்டதாகவும் இது அவர் மீது தனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது எனவும் கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers